Saturday, January 26, 2013

குட் நைட்

இதை
ஒரு நிதானமற்ற பொழுதின்
கை நடுக்கங்களுக்கிடையே
இலக்கில்லாமல் கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்..

சத்தமில்லாமல்
புகைந்து கொண்டிருக்கிறது
இந்த ஆழ்ந்த பனி இரவின்
தெரு விளக்கு வெளிச்சம்..

இறந்த காலத்தின் வலிகளிலொன்று
மூளையின் எங்கோ ஓர் மூலையில்
உயிர்பெற்று
நெஞ்சத்தினூடே வழிந்து

பின் வார்த்தைகளாய்
உருமாற தெரியாமல் உதிர்கிறது..
இதோடு
இந்த கிறுக்கலும் நின்று போகிறது..

நாளைய இரவிலும்
என் உளறலை தொடர கூடும் என்ற அவசியமற்ற தகவலோடு
இப்போது வலுக்கட்டயாமாய்
தூக்கத்தை போர்த்திகொள்ள போகிறேன்..

குட் நைட்..

108ன் சிறப்பு தெரியுமா?


படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.

* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?

ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

சூரியன்

          பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. இந்த கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள் என்ன, அவரவர் ஜாதகப்படி தரும் பலன்கள் என்ன, ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன கிழமை, தேதிகள், எண், நிறம் ஏற்றது என்பதை இனி பார்க்கலாம்.

சூரியன்
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.

சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.

ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.

பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி & மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி & பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி & அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி & தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி & நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் & சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.

வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.

உலகப் பழமொழிகள்.

  • நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்; வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;  நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்; துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்; உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-இந்தியா.
  • உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
-ஆப்பிரிக்கா.
  • மணவாழ்க்கை என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
-அரேபியா.
  • பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே.
-ஸ்வீடன்.
  • துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால் விலங்கினங்கள் கொழுத்தால் அழகு. மனிதர்கள் படித்தால் அழகு. பெண்கள் மணந்தால் அழகு.
-மியான்மர்.
  • தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை! கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை.
-போர்ச்சுக்கல்.
  • பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி; நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.
 -அரேபியா.
  •  மூன்று உயிரினங்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிப்பவை. அவை; பூனைகள், ஈக்கள்; காதலிகள்.
- பிரான்ஸ்.
  •  தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.
- ஆப்கானிஸ்தான்.
வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு. ஆனால், அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

ஓரெழுத்து ஒரு சொல்..!



நம் தமிழ் மொழியின் சிறப்புக்களில் ஒன்று...

ஆ - பசு

ஈ - பறக்கும் பூச்சி

ஊ - இறைச்சி

ஏ - அம்பு

ஐ - அழகு, தலைவன்

ஓ - வினா, மதகு(நீர் தங்கும் பலகை)

மா - பெரிய

மீ - மேலே

மு - மூப்பு

மே - அன்பு, மேன்மை

மை - கண்மை(அஞ்ஞனம்)

மோ - முகர்தல், மோத்தல்

தா - கொடு

தீ - நெருப்பு

தூ - வெண்மை

தே - தெய்வம்

தை - தைத்திங்கள்

சா - மரணம், பேய்

சீ - இகழ்ச்சி, சீத்தல்

சே - எருது

சோ - மதில்

பா - பாட்டு,நிழல், அழகு

பூ - மலர்

பே - நுரை, அழகு

பை - பசுமை, கைப்பை

போ - செல்,போதல்

நா - நாக்கு

நீ - நீ

நே - அன்பு, நேயம்

நை - வருந்து, நைதல்

நோ - நோய், வருத்தம்

கா - சோலை

கூ - பூமி

கை - கரம்

கோ - அரசன், இறைவன்

வா - வருக

வீ - பூ

வை - கூர்மை, வைத்தல்

வௌ - வவ்வுதல் (அ) கௌவுதல்

யா - ஒரு மரம்

நொ - துன்பம்

து - கொடு, உண், பிரிவு

இளநீர்

காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும் .

இது இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.

உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.

பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும்.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. .
மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது .
இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.
காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் குடிக்கலாம். தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது

வெற்றிலை

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.
இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.


வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.


வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,

குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்

கண் பார்வை வலுப் பெற..!

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சுமார் 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 கிராம்) த்ரைபல க்ருதம் எனும் உருக்கிய நெய் மருந்து, அரை ஸ்பூன் சுத்தமான தேன் என்ற விகிதத்தில் சதும்ப குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் நீங்குவதோடு பார்வையும் நன்றாகத் தெரியும்.
அதிக நேரம் தரையில் குனிந்து அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வது, படுத்துக் கொண்டு பாடப் புத்தகங்ளைப் படிப்பது, அதிக வெளிச்சமில்லாத அறையில், தனக்குப் பின்புறம் தலைக்கு மேல் விளக்கு எரியாமல், முன்புறம் எரியும் விளக்கில் படிப்பது, பிள்ளைகளுக்குச் சளி பிடித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் தலைக்குச் சுடு தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டுவது, நூடூல்ஸ், பாஸ்தா, பர்க்கர், பேல்பூரி, பானிப்பூரி, மசாலா சுண்டல், சிப்ஸ் போன்றவற்றைப் பிள்ளைகள் ஆசைப்படும்போதெல்லாம் வாங்கித் தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை.
உணவாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மிதிபாகல் பிஞ்சு, வெண்டை, மணத்தக்காளி, வற்றல், கேரட், முட்டை, பசும்பால் அதிகம் சேர்ப்பது நலம். மேலும் பயறு, கடலை, துவரை, உளுந்து, காராமணி, எள்ளு, மொச்சை முதலிய பருப்பு வகையும் மிளகு, சுக்கு, பெருங்காயம் (சிட்டிகை) முதலிய ஜீரண உதவிகளையும் காலை உணவாக ஏற்பது பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. தாமதித்துச் செரிக்கும் உணவுப் பொருட்களாகிய கிழங்குகள், பழ வகைகள், எருமைத் தயிர், கீரை போன்றவை மதிய உணவிலும், பகல் பொழுதிலும் சேர்த்தால் ஏற்படும் வயிற்று மந்தம் வெயிலின் சூட்டாலும், விளையாட்டாலும் பாதிக்காது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பசுவின் பால், கடைந்த மோர், முருங்கைப் பிஞ்சு, துவரம் பருப்பு, மணத்தக்காளி வற்றல் போன்றவை இரவில் சாப்பிட உகந்தவை.
"ஆலோசகம்’ என்றொரு பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பார்வை தெளிவாக இருப்பதற்கு இந்த பித்தம் உதவுகிறது. காரம், புளி, உப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்தால் இந்தப் பித்தம் கெட்டுவிடும். கண்பார்வை மங்கும். அதனால் இந்தச் சுவைகளை உணவில் குறைத்து வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்புச் சுவையும், கசப்பான பாகற்காய், அகத்திக் கீரையும், இனிப்பான பொருட்களையும் பிள்ளைகளுக்குச் சாப்பிடும்படி பழக்கினால் இந்த ஆலோசக பித்தம் நன்றாகச் செயலாற்றும்.
கண்களில் வெளிப்புறம் உளுந்து மாவை வரம்பு கட்டி, கண்களில் உள்ளே மூலிகை நெய் மருந்தை ஊற்றி நிரப்பி, கண்களைத் திறந்து மூடச் செய்யும் நேத்ர தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை, புடபாகம், பிடாலகம், ஆஸ்சோதனம், அஞ்சனம் போன்ற கண் சிகிச்சை முறைகளால் கண்பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைமுறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
உள்ளங்கால் நடுப்பகுதியில் "தலஹ்ருதயம்’ என்று ஒரு மர்ம ஸ்தானமிருக்கிறது. அந்த இடத்தில் பசு நெய்யை உருக்கித் தொடர்ந்து பூசி வந்தால், கண்பார்வை நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நயனாமிருதம் என்ற கண்சொட்டு மருந்தும் உபயோகிப்பது கண்களுக்கு வலுவைக் கூட்டும். முதலில் விட்டவுடன் எரிச்சலைத் தரும். ஆனால் அதன் பிறகு குளிர்ச்சியைத் தரும். வீட்டில் சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சமையலுக்கு உபயோகித்து வந்தால் கண்களுக்கு நல்லது. பொதுவாகவே உப்பு கண்களுக்குக் கெடுதல். ஆனால் இந்துப்பு இதற்கு விதிவிலக்காகும்

வாழை இலையின் பயன்கள்:

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

தண்ணீரில் நடக்கும் பல்லி

       பல்லிகள் நம் வீட்டுச்சுவர்களில் தலைகீழாக நடக்கும். தரையிலும் தனது பூச்சி உள்ளிட்ட இரைகளை துரத்திப் போய் பிடிக்கும். ஆனால் இதே பல்லிகள் தண்ணீரைக் கண்டால் மட்டும் கப்சிப்பாகி விடும்.

water ஆனால் ஒருவகைப் பல்லிகள் தண்ணிரிலும் சர்வ சாதாரணமாக நடந்து பயணிக்கின்றன.
இந்த பல்லியின் நீளம் ரெயில் பெட்டி மாதிரி கொஞ்சம் நீளம். (சுமார் 2 அடி) ஒல்லியான இதன் உடல் வாகும் இது தண்ணீரில் பாய்ந்து செல்ல உதவுகிறது.
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இந்த பல்லிகள் தண்ணிரில் வேகவேகமாக நடப்பதை வழக்கத்தில் வைத்திருக்கின்றன.
இந்தப் பல்லி தண்ணிரில் நடக்கும் ரகசியம், இதன் அகன்ற பின்புற கால்கள். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் உள்ள ஜவ்வு தண்ணீரில் நேராக நடக்க உதவுகிறது. அப்படி தண்ணீரில் இவ்வகைப் பல்லிகள் நடக்கும்போது தன் பின்னங்கால்களையே பயன் படுத்துகிறது.
மத்திய அமெரிக்காவில் தண்ணீர் கரையோரங்களில், ஏரிகளில், கால்வாய்களில் இந்த பல்லிகள் தண்ணீரில் நடப்பதை முதன்முதலாக பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.
பூச்சிகள், பழங்கள், சிலவகை இலை தழைகள் இந்த பல்லிகளின் விருப்ப உணவு

முருகன் பற்றி அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி!

1966, டிச.21ல் சுதேசமித்திரனில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இதழில், குளோதி என்ற அமெரிக்க இளைஞர் முருகனைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த செய்தியின் சாராம்சம் இது தான். ""அமெரிக்க பாதிரியாரின் மகனாக இந்தியாவில் 1936ல் பிறந்தவர் குளோதி. கொடைக்கானலில் படித்தவர். முருகன் வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகத்தில் ஒரு ஆண்டு தங்கியிருப்பார். அமெரிக்காவில் உள்ள இந்திய ஆராய்ச்சிக்கூட்டத்தைச் சேர்ந்த அறிஞர் குளோதி. இவர் தென்னிந்திய சமயவரலாறு பற்றிய ஆராய்ச்சிகளை முடித்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்திற்குரிய தேர்வு எழுத இருக்கிறார். இவருக்கு தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் உண்டு. சிகாகோ பல்கலைக்கழக திராவிடவியல் வல்லுநர் டாக்டர் சுமில்சுவலபில், சமய ஆராய்ச்சி வல்லுநர் டாக்டர் எலியாடி, தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர் ஏ.கே.ராமானுஜம் ஆகியோர் குளோதியிடம் தமிழ் பாரம்பரியத்தை ஆய்வு செய்ய ஊக்கப்படுத்தினர். குளோதி இது பற்றிக் கூறும்போது,"" வரலாற்றின் உண்மைச் செய்திகளை எழுதி வைக்க வேண்டும் என்று நான் முருகவழிபாடு பற்றிய மரபுகளை ஆராயவில்லை. மனிதனுடைய சமயங்களில் காணப்படும் பல்வேறு கோட்பாடுகளில் சின்னங்களுக்குப் புதுவிளக்கம் கொடுப்பதில் மனித குலத்திற்கு துணையாக இருப்பதே எனது நோக்கமாகும். இந்து, கிறிஸ்தவ மதங்கள் இரண்டிலுமே மறைபொருளான சின்னங்கள் உள்ளன. உதாரணமாக கிறிஸ்தவர்களுக்கு ஆட்டுக்குட்டி, சிலுவை, புல்லுருவிச் செடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதுபோல, முருகனின் வாகனங்களாக ஆடு, மயில், யானை ஆகியவை கூறப்பட்டுள்ளன, என்று குறிப்பிடுகிறார்.

வேலவனின் வெற்றிநகர்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன் தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் என்பதற்கு "புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள்.
செந்தூரில் தீர்த்தமாடும்முறை: திருச்செந்தூர் என்ற சொல்லை காதால் கேட்டாலே முக்தி தரும். தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றும் அமையப்பெற்றது. எந்தச் செயலையும் முறையாகச் செய்தால் தான் அதன் பலனை அடைய முடியும். திருச்செந்தூரைப் பொறுத்த வரை தீர்த்தமாடும் முறையில் மிக கண்டிப்பான முறையை பின்பற்ற வேண்டும். பொதுவாக பக்தர்கள் கடலில் நீராடிய பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த உப்புநீரைக் கழுவ வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில் கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய வேலுக்கு தோஷம் நீங்கும் பொருட்டு அதனை பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது. முருகப்பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது போன்ற தீர்த்தம் கிடையாது. கடலில் நீராடிய பின் நாழிக்கிணற்றில் குளித்தால், செந்தூர் வந்த புண்ணியபலனை அடைய முடியாது.

அருள்புரிவாய் கருணைக்கடலே: கந்தசஷ்டி நன்னாளில் முருகனருளால் எல்லா நலமும் வளமும் பெருக இந்த அருளுரையை வாசியுங்கள்.
* ஆனைமுகக் கணபதியின் அன்புத் தம்பியே! ஞானபண்டிதனே! ஆறுமுகப்பெருமானே! மயில்வாகனனே! சிக்கல் சிங்கார வேலவனே! திருப்பரங்குன்றத்தில் உறையும் பரம்பொருளே! வள்ளிக்கு வாய்த்தவனே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரனே! செந்தூரில் வீற்றிருக்கும் வெற்றி வேலனே! எப்போதும் என் உள்ளத்தாமரையில் வீற்றிருந்து அருள்புரிய வேண்டும்.
* ஆறுபடை வீடுகளில் ஆட்சி நடத்துபவனே! ஆதிசிவனின் அருமைப்பிள்ளையே! சரவணப்பொய்கையில் அவதரித்தவனே! காங்கேயனே! திருமாலின் மருமகனே! வேதமந்திரங்களின் உட்பொருளாகத் திகழ்பவனே! தெய்வானை மணவாளனே! தண்டாயுதபாணியே! சோலைமலை சுந்தரனே! குழந்தைக் கடவுளே! குன்றுதோறும் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! உனது அருளால் எங்கள் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

* பிறவிக்கடலைக் கடக்க வைக்கும் தோணியே! மலையேறி வருபவர்களை அவர்களது வாழ்விலும் உயரச் செய்பவனே! அசுரனுக்கும் பெருவாழ்வு தந்த இரக்க குணமுள்ள ஈசனே! தவஞானியர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் உத்தமனே! வேடராஜன் நம்பியின் மகளான வள்ளியின் அன்பனே! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளலே! திருத்தணி வாழ் பெருமானே! உன்னை எப்போதும் சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* தந்தைக்கு பாடம் சொன்ன சுப்பையனே! சந்திரனைப் போல குளிர்ச்சி மிக்க ஆறுமுகங்களைக் கொண்டவனே! சரவணனே! சண்முகனே! வெற்றிவேலாயுதனே! சிவகுமாரனே! தேவசேனாபதியே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! தாரகாசுரனை வதம் செய்தவனே! பிள்ளைக் கனியமுதே! அருள்புரியும் கருணைக்கடலே! பழநிமலை பாலகனே! உன் திருவடிகளைச் சரணடைந்து விட்டேன். நீயே என்னை பிறவிக்கடலில் இருந்து மீட்டு உன் திருவடியில் சேர்க்க வேண்டும்.

* வீரம், அன்பு, அருள், ஞானம், இன்பம், கருணை ஆகிய ஆறுகுணங்களின் இருப்பிடமே! வைதாரையும் வாழவைக்கும் தெய்வமே! கேட்டதை அருளும் கற்பகத் தருவே! கற்றவர் போற்றும் கனியே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! திருப்புகழ் போற்றும் திருமுருகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! சுவாமிமலை குருநாதனே! குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெறச் செய்வாயாக.
* சிவபார்வதி மைந்தனே! பரங்குன்றத்து பவித்ரமே ! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபத்மனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வள்ளிமணாளனே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வாழ்வில் குறுக்கிடும் தடைகளைப் போக்கி வெற்றியைத் தந்தருள்வாயாக.
*பார்போற்றும் தெய்வமே! நவவீரர்கள் போற்றும் நாயகனே! புண்ணிய மூர்த்தியே! குருவாய் வந்தருளும் குகப்பெருமானே! எட்டுக்குடி வேலவனே! விராலிமலைவாழ் விமலனே! குமரகுருபரர் பாடிய திருச்செந்தூர் கந்தா! உன் திருவடியில் அடைக்கலம் கொடு.

* பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! முத்தமிழ் வித்தகனே! தும்பிக்கையான் தம்பியே! அருணகிரியை ஆட்கொண்டவனே! குமரகுருவே! வயலூரில் வாழ்பவனே! கந்தகோட்டத்தில் உறைந்திருக்கும் கந்தசுவாமியே! குமரகோட்டத்து குருபரனே! உன்னருளால் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகட்டும்.

* தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கொண்டவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறு தலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தவனே! கலியுகவரதனே! முத்துக்குமார சுவாமியே! கண்கண்ட தெய்வமே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி செய்யும் செந்திலாண்டவனே! எல்லோரும் இன்புற்றிருக்க உன் அருள்மழையை எப்போதும் பொழிவாயாக.

பசுவின் பால் சைவமா அசைவமா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் அவ்வைப்பாட்டி.

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்


ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின்மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.

ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது

மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.

மூலநோய் குணமாகும்

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும்
ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்தபொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.சிறுவர்கள் முதல்பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.
தசை வலி நீங்கும்
ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது
பல்வலி போக்கும்
பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்.

பனை நுங்கு

 
 புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை

செயற்கை இரத்தம் - சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை............!!

உயிர் காக்கும் செயற்கை இரத்தம் - சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை............!!  உலக நாடுகளை விட இன்று அதிக அளவில் சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடு இந்தியா,  இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது, ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை போக்க சென்னை ஐ.ஐ.டி ஆய்வு வழி கண்டு பிடித்து, சென்னை ஐ.ஐ.டி, விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.  மூன்றாண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர், இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தேவையான நிதியை வழங்கியது. டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர்,  வெற்றியான ஆய்வை குறித்து டாக்டர் சோமா கூறும் போது: அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் . ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்,  இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.  இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடியின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது. இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் எய்ட்ஸ் போன்ற நோய் கிருமிகள் தொற்று இல்லாததாகவும் இருக்கும்.  அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக உயிர் காக்கும் விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


உலக நாடுகளை விட இன்று அதிக அளவில் சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடு இந்தியா,

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது, ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை போக்க சென்னை ஐ.ஐ.டி ஆய்வு வழி கண்டு பிடித்து, சென்னை ஐ.ஐ.டி, விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர், இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தேவையான நிதியை வழங்கியது. டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர்,

வெற்றியான ஆய்வை குறித்து டாக்டர் சோமா கூறும் போது: அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் . ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்,

இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடியின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது. இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் எய்ட்ஸ் போன்ற நோய் கிருமிகள் தொற்று இல்லாததாகவும் இருக்கும்.

அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக உயிர் காக்கும் விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தாய்ப்பால் பற்றிய தகவல்..

* குழந்தை பிறந்த முதல் 6 மாதத்துக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

* தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் வேறு உணவு - தண்ணீர்கூட தேவையில்லை. சர்க்கரைத் தண்ணீர், தேன் போன்றவற்றைத் தரக்கூடாது.

* குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

* புட்டிப்பால், டின்பால் அறவே கூடாது.

* குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் மிகவும் உதவுகிறது.

* தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் கூட பல நன்மைகளை அள்ளித்தருகிறது.

* குழந்தைகள் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* ஹெர்பிஸ் வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

* பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தாய்ப்பால் உதவுகிறது.

* சர்க்கரை நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது.

* குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட வழிவகுக்கிறது...!

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள்! நிறுவனம் தொடங்கி மூன்று மாதங்களாகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசிநாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப்போவதாகச் சொன்னார். ஆப்பிள் கனிந்தது.


யாஹு

ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய ‘குலிவர்ஸ் டிராவல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் பாத்திரம் இது. துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை, தன் இணையதளத்திற்கு சூட்டினார்கள், யாஹுவை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.


ஜெராக்ஸ்

‘ஜெர்’ என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும்போது மை காய்ந்திருக்கும் என்பதைக் குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்குமுன், நகலெடுத்தால், மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.


லோட்டஸ்

இதன் நிறுவனர் மிட்ச் கபூர், மகரிஷி மகேஷ் யோகியின் தியானமுறை பயிற்றுனர். பத்மாசனம் இட்டு அமர்கிற யோகாசனத்தின் அடிப்படையில், லோட்டஸ் என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்தார்.


அடோப் (ADOBE)

அடோப் நிறுவனர் ஜான் வார்னாக்-கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.


சன் மைக்ரோசிஸ்டம்ஸ்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு நண்பர்கள் இணைந்து Stanford University Network என்பதை சுருக்கி
SUN MICRO SYSTEMS என்று பெயர் வைத்தனர்.

தெரிஞ்சுக்குவோம்

  1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

மின்னஞ்சல்லை கண்டுபிடித்த இந்தியர்

e-mail லை கண்டுபிடித்தவர் ஒரு இந்தியார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai)
(பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார்.
இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.
இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன..

குட்டிக்கதை



ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன் என்றார் ''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.

அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவன் வருவதையறிந்த ஞானி தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''
என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன்,

""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள் '' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு என்றார் ...!

அந்த கனமே உணர்ந்த மனிதன் அக்குடியை தவிர்த்தான்.

நீதி: பல பிரச்சனைகளே நாமே உருவாக்கிப் பெரிதுபடுத்தி அதனிலிருந்து வெளியில் வரமுடியாமல் அல்லற்படுகிறோம். நமது குழப்பங்களுக்கு நாமே காரணமென உணரும்போது நாம் அவற்றிலிருந்து விடுதலை பெறுகிறோம்.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!


* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள்

எத்தனையோ சிறப்பு வாய்ந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இடம்பிடித்துள்ளன. அவை எல்லாம் தமிழ்நாட்டை சிறப்பிக்கின்றன. அவற்றின் பட்டியலைக் காண்போம்.

கல்லணைதான் மிகப் பழமையான அணைக்கட்டு ஆகும்.

அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் அமைந்துள்ளது.

மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா தமிழகத்தின் சிறப்புதான்.

ஈரோடு அடுத்து மேட்டூரில் உள்ள அணைதான் மிகப்பெரிய அணையாகும்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது.

தொலைநோ‌க்‌கிக‌ளிலேயே காவலூர் வைணுபாப்பு மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.

தமிழகத்தின் நுழைவாயிலாக, துறைமுகத்தைக் கொண்ட தூத்துக்குடி திகழ்கிறது.

கங்கைக்கு ஈடான ஆறாக காவிரி ஆறு விளங்குகிறது. இது தென்னாட்டு கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலின் கோபுரம் மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ளது.

மலை வாசஸ்தலங்களில் எல்லாம் ராணியாக திகழ்வது ஊட்டியாகும்.

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்

1     பண்ருட்டி     பலாப்பழம்     -
2     சேலம்     மாம்பழம், வென்பட்டு    
3     மதுரை     மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா    
4     பழனி     பஞ்சாமிர்தம்     -
5     தூத்துக்குடி     மக்ரூன், உப்பு     -
6     மணப்பாறை     முறுக்கு, உழவு மாடு     -
7     கோவில்பட்டி     கடலை மிட்டாய்     -
8     திருநெல்வேலி     அல்வா     -
9     பரங்கிப்பேட்டை     அல்வா     -
10     ஸ்ரீவில்லிப்புத்தூர்     பால்கோவா     -
11     காரைக்குடி     செட்டிநாட்டு உணவுகள்     -
12     தஞ்சாவூர்     தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர்  தட்டு    
13     காஞ்சிபுரம்     பட்டுப்புடவை   
14     திண்டுக்கல்     பூட்டு, பிரியாணி     -
15     ஆம்பூர்     பிரியாணி     -
16     சிவகாசி     பட்டாசு, நாட்காட்டி     -
17     திருப்பூர்     பனியன்     -
18     கும்பகோணம்     பாக்குச் சீவல், வெற்றிலை     -
19     நாகர்கோவில்     வாழைக்காய், வத்தல், நாட்டு மருந்து
20     மார்த்தாண்டம்     தேன்     -
21     தேனி     கரும்பு     -
22     ஊத்துக்குளி     வெண்ணெய்     -
23     பத்தமடை     பாய்     விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
24     திருச்செந்தூர்     கருப்பட்டி     -
25     வாணியம்பாடி     பிரியாணி     -
26     பவானி     ஜமக்காளம்    
27     ஆரணி     பட்டு     ஆம்
28     சிறுமலை     மலைவாழை 
29     நாச்சியார்கோயில்     விளக்கு     விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
30     திருப்பாச்சேத்தி     அரிவாள்     -
31     விருதுநகர்     புரோட்டா     -
32     சின்னாளப்பட்டி     கண்டாங்கி சேலை

வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்


வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்




பம்பரம்
















பயாஸ்கோப்


























கோலிக்குண்டு



















ராஜ்தூத்





















ரிங் ரிங்

















பத்து பைசா













ஐந்து பைசா















இன்லேண்ட் லெட்டர்
























கேசட் பிளேயர்



















சேவல் சண்டை





















கோழிக்கூண்டு
















விறகு அடுப்பு
















கார்பன் பேப்பர்
















சோடா பாட்டில்
























ஓட்டுப்பெட்டி



























ஆண்டென்னா
























சிலேடு























குதிரை வண்டி




சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல


சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா


9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....


இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல

மொக்கை தத்துவங்கள்



    உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!



    பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!



    எல்லாமே காதல்தான்னா என் நண்பன் ஒரு பொண்ண விரும்புகிறான்; அவ புருஷன் அதை கள்ளக்காதல்னு சொல்லுறான்! அவனுக்கு தெரியாது போல...



    நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் :-)


    பஞ்சு போல் இருப்பதால்தானோ பஞ்சாபி என்ற பெயர் வந்திருக்கும்?




    பெண்கள் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்! மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!



    எதிர்பாராத முத்தம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், உன் தங்கையிடமாவது? :P


    'சட்டம் தன் கடைமையைச் செய்யும்'ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன் கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது?



    பவர் ஸ்டாரை புடிச்சு ஜெயில்ல போட்டுட்டீங்க, அப்புறம் எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு


    காதலிக்கிற பலபேர் காதலிக்கு வாட்ச்மேனாதான் வேலை பண்ணுறானுக - அவ்வ்வ்

இவங்க எல்லாம் பாடினா என்ன பாட்டு பாடுவாங்க?

பாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு...........

ஆங்கில வாத்தியார்: A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................

பைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......

டப்பிங் ஆர்டிஸ்ட்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......

வக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............

டெண்டுல்கர் பாடினால் "அடிச்சால் சிக்ஸரு.... எடுத்தால் செஞ்சுரி.........."

தோனி பாடினால்
: பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி...

பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

பால்காரர் பாடினால்:

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரால் பிழைக்க வைத்தான்

மொக்கையோ மொக்கை

மொக்கை1

ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;

கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;

சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?

மொக்கை2

தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.

வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.

சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமா?

மொக்கை3

டிவியை
வாட்ச் பண்ணமுடியும்.

வாட்ச்சை
டிவி பண்ண முடியுமா?

மொக்கை4

ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.
ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?

மொக்கை5

கையால் போட்டால் கையெழுத்து;
காலால் போட்டால் காலெழுத்தா?

கைவெட்டு என்றால்
கைதுண்டாகும்

கால்வெட்டு என்றால்
கால்துண்டாகும்

மின்வெட்டு என்றால்
மின்சாரம் துண்டாகுமா?

மொக்கை6

முட்டை போடுற கோழிக்கு
ஆம்லெட் போடத் தெரியாது.

ஆம்லெட் போடுற நமக்கு
முட்டை போடத் தெரியாது.

மொக்கை7

மனிதனுக்கு வந்தால் அது
யானைக்கால் வியாதி!

யானைக்கு வந்தால்
அது மனிதக்கால் வியாதியா?

மொக்கை8


குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது

கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
,

பத்து மொக்கை தத்துவங்கள்

பத்து மொக்கை தத்துவங்கள்

தத்துவம் நம்பர்1




காலில் ஆணி


என்னதான் நம்ம காலில் ஆணி இருந்தாலும் அதுல காலண்டர் மாட்ட முடியுமா?

தத்துவம் நம்பர்2



ஆட்டோ

ஆட்டோக்கு ஆட்டோன்னு பேர் இருந்தாலும் மேனுவலா தான் ஓட்ட முடியும்

தத்துவம் நம்பர்3


மெழுகு வர்த்தி

மெழுகுவர்த்தில மெழுகு இருக்கும் ஆனா கொசுவர்த்தில கொசு இருக்காது....

தத்துவம் நம்பர்4

சாலை

சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து

தத்துவம் நம்பர்5




மைசூர்பாகு சாப்ட்டா சுகர் வரும் சுகர் சாப்ட்டா மைசூர்பாகு வராது

தத்துவம் நம்பர்6

ஹைஹீல்ஸ்

எவ்வளவு குட்டையா இருந்தாலும் ஹைஹீல்ஸ் போடலாம்
எவ்வளவு நெட்டைய இருந்தாலும் லோஹீல்ஸ் போடமுடியாது.....

தத்துவம் நம்பர்7



குவார்ட்டர்

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

தத்துவம் நம்பர்8

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம் ஆனா
1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது...

தத்துவம் நம்பர்9

முடி

குலவி கொட்டுனா வலிக்கும்
தேள் கொட்டுனா வலிக்கும்
ஆனா முடி கொட்டுனா வலிக்குமா?

தத்துவம் நம்பர்10



பேக் கட் ஆனா தைக்கலாம்
துணி கட் ஆனா தைக்கலாம்
கரண்ட் கட் ஆனா தைக்கமுடியுமா?