Saturday, January 26, 2013

இது மதச் சார்பற்ற நாடுதானா? - அஜீத் திடீர் கேள்வி

 இந்தியா மதச் சார்பற்ற நாடுதானா... ஜனநாயகமும் சம உரிமையும் உண்மையிலேயே உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் அஜீத். நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆனால் என்ன காரணம், எதற்காக அவர் கோபப்படுகிறார் என எதையுமே குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அந்த அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கை விவரம்: இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன்மூலமாக ஒரு இந்திய குடிமகனுக்கு சமநீதி, உரிமை, சமத்துவம் என்று உத்தரவாதம் அளிக்கின்றது. ஆனால், இன்றைய நிலை என்ன தெரியுமா? இந்த உத்தரவாதங்கள் திரிக்கப்பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும், சுயநலப் போக்கும்தான் என்றாகிவிட்டது. மதச்சார்பின்மை என்றால் அரசியல் அமைப்பும் சரி, சமூக அமைப்பும் சரி, மத சார்புள்ள நம்பிக்கையையும் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளாததே.








நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்று ஐயம் வாக்கு வங்கி அரசியலைப் பார்க்கும்போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறது. நமது நாட்டில் ஜனநாயகமும் மதசார்பற்ற நிலையும் ஒரு புரிந்து கொள்ளப்படாதது அல்ல. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும், நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்துப் பார்க்க இதுவே சரியான தருணம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment