Friday, January 25, 2013

விஸ்வரூபம்








சான் ஓசே (யு.எஸ்): தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ள விஸ்வரூபம் படத்துக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 உலகின் மேற்கு கோடியில் வெளியாகியுள்ள தமிழ்ப் படத்திற்கு, நாயகன் கமல் ப்ரமோட் செய்கிறார். ஆனால் உலகின் பல பகுதிகளிலும் வெளியாகிய விஸ்வரூபம் தமிழகம், புதுவை மற்றும் பெங்களூரில் வெளியாகவில்லை.
இது தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய விவகாரமாகும்.
 அமெரிக்காவில் கிழக்கே நியூயார்க் முதல் மேற்கே லாஸ் ஏஞ்சல்ஸ் வரை அனைத்து பெரும் நகரங்களிலும் வியாழக்கிழமை இரவே சிறப்புக் காட்சிகள் நடந்துள்ளன. கலிஃபோர்னியா சிறப்புக் காட்சிகள் இன்னும் முடியவில்லை. கமல் ஹாசன், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஓசே மற்றும் ஃப்ரீமாண்ட் நகரங்களில் நேரடியாக ரசிகர்களை சந்திக்கிறார். அனைத்து காட்சிகளுக்கும் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஏனைய நகரங்களிலும் சிறப்புக் காட்சிகள் ஹவுஸ் புல்லாகியுள்ளது. தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது ஆனால் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது என்ற செய்தி, அமெரிக்காவில் தமிழ் தெலுங்கு, இந்தி பேசும் மக்களிடையே பெரும் ஆவலை தூண்டிவிட்டுள்ளது. தடை செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்ற ஆவலே, பெரும் விளம்பரமாகிவிட்ட்து.

No comments:

Post a Comment