Friday, January 25, 2013

சோலார் Solar



ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது என்ற அடிப்படை பௌதிக தத்துவமும் ஐன்ஸ்டீனின் ஒளி மின் விளைவு விதியையும் ஒரு புள்ளியில் இணைக்கும் போது தான் சோலார் பேனல்கள் உருவெடுத்தது.


சோலார் பேனல்களில் பெரும்பாலும் சிலிகான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
100 நானோ மீட்டருக்கும் குறைவான அலைநீளமுள்ள சூரிய ஒளி அலைகள் இதன் தளத்தில் படும்போது அதனிடத்தில் உள்ள ஒரு எலக்ட்ரான் கிளர்வுறுகிறது. அது வெப்பத்தை உமிழந்து செயலிழந்து விழும்போது சிலகுறிப்பிட்ட ஜங்க்ஷனில் விழச்செய்யப்படுகின்றன. அப்போது அவை மீண்டும் கிளர்வுறுகின்றன அல்லது உறிஞ்சப்படுகின்றன. இவ்வாறாக எலக்ட்ரான்கள் துண்டப்பட்டு தொடர்ச்சியாக ஒரு திசையில் கிளர்வுற்று நகரச்செய்யப்படுகின்றன. இவ்வாறாக மின்சாரம் சுற்றுகளில் விடப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது.(எலக்ட்ரான்களின் ஓட்டம் தானே மின்சாரம்!)

சிலிகான்கள் குறைகடத்திகள் ஆதலால் அதில் கொஞ்சம் மாசு தனிமங்கள் சேர்க்கப்பட்டு பெர்க் மாதிரியான வேஃபர் வடிவில் சோலார் பேனல்கள் தயாரிக்கப்படுகின்றன.
 இவை இல்லாவிட்டால் செயற்கை கோள்களை நீண்டகாலம் செயலாற்ற வைக்க இயலாமல் போயிருக்கும்.









சோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1
பொதுவாக சோலார் பவர் சிஸ்டத்தை இரண்டு வகையாகபிரிக்கலாம்.

1. சோலார் பேனல்களிலிருந்து பெறப்படும் டி.சி மின்சாரத்தை சார்ஜ் கண்ட்ரோலர் மூலம் ஒழுங்கு படுத்தி 12 வோல்ட் பாட்டரிகளில் சேமித்து அதை கொண்டு 12 வோல்ட் டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய விளக்கு, பேன் போன்றவற்றை இயக்க பயன்படுத்துவது டி.சி பவர் சிஸ்டம் .

2. மேற்கூறியவாறு பாட்டரிகளில் சேமிக்கப்பட்ட டிசி மின்சாரத்தை  இன்வெர்ட்டர் என்ற சாதனத்தின் மூலம் 230வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றி, நாம் உபயோகப்படுத்தும் மின் சாதனங்களை இயக்க பயன்படுத்துவது ஏசி பவர் சிஸ்டம்.

இதற்கு முந்தைய பதிவுகளில், இரண்டாவதாக கூறப்பட்டுள்ள 230 வோல்ட் ஏசி பவர் சிஸ்டத்தை பற்றி விரிவாக பார்த்து விட்டோம். இனி டிசி பவர் சிஸ்டத்தை பற்றி பார்க்கலாம்.கீழே காட்டப்பட்டுள்ள படம் டி.சி சோலார் பவர்  சிஸ்டத்தின் அடிப்படை இணைப்பை விளக்குகிறது.
 

இதன் அடிப்படையில்தான் டிசி சோலார் பவர் சிஸ்டம் அமைக்கப்படுகிறது.

கீழே உள்ள லாந்தர் விளக்கு மாடல்  சோலார் பவர் சிஸ்டத்தை பாருங்கள்.



இதில் சோலார் பேனல் நீங்கலாக பாட்டரி, சார்ஜ் கண்ட்ரோலர், சி.எஃப்.எல் பல்பு ஆகியவை விளக்கினுள் பொருத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளி படும்படி பகல் நேரத்தில் பேனலை வைத்து விட்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வயரை விளக்கில் இணைத்து விட வேண்டும். பாட்டரி சார்ஜ் ஆகிவிடும். இரவில் விளக்கை மட்டும் எடுத்து எமெர்ஜென்சி விலக்கு போல உபயோகப்படுத்தலாம். இந்த விளக்கு எரியும் நேரம் இதில் பொருத்தப்பட்டுள்ள பாட்டரி, சோலார் பேனலின் திறனை பொறுத்து வேறுபடும். உத்தேசமாக 10W/12V சோலார் பேனல், 7Ah /12V பாட்டரி, 7W CFL பல்பு கொண்ட லைட் 8-10  மணி நேரம் எரியும்.




பொதுவாக சோலார் டி.சி பவர் சிஸ்டத்தில் சி.எஃப்.எல் பல்பு அல்லது எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படும். இவற்றின் வேறுபாடு, பயன் பற்றி இனி பார்ப்போம்.

மின் பல்புகளில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தின் அளவு லுமென்ஸ்(Lumens) என அழைக்கப்படும். அதைப்போலவே சாதாரண குண்டு பல்பு  Incandescent Bulp எனப்படும். கீழே உள்ள அட்டவணையை பாருங்கள்.



40 வாட்ஸ் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தின் அளவு 450 லூமென்ஸ் ஆகும். ஆதே வெளிச்சத்தை 8-12 வாட்ஸ் சி.எஃப்.எல் பல்பும், 4-5 வாட்ஸ் எல்.இ.டி பல்பும் தருகிறது.



அதாவது குண்டு பல்புக்கு தேவைப்படும் மின்சாரத்தில் 5-ல் 1 பங்கு மின்சாரத்தை சி.எஃப்.எல் பல்பும், 8-ல் 1 பங்கு மின்சாரத்தை எல்.இ.டி பல்பும் எடுக்கிறது. அதே நேரத்தில் அதன் வாழ்நாளும் அதிகம். சாதாரண குண்டு பல்பின் ஆயுட் காலம் 1200 மணி நேரம். சி.எஃப்.எல் பல்பின் ஆயுட்காலம் 10,000 மணி நேரம். எல்.இ.டி பல்பின் ஆயுட்காலம் 50,000 மணி நேரம் ஆகும்.

இந்த சி.எஃப்.எல், எல்.இ.டி பல்புகள் நேரடியாக மின்சாரத்தில் இயங்கக்கூடியது அல்ல. 6V/12V DC மின்சாரத்தில் எரிய அதற்குரிய சோக் எனப்படும் எலெக்ட்ரானிக் பாலஸ்ட்  இணைக்கப்பட்டிருக்கும். அதைப்போலவே நாம் உபயோகிக்கும் 230V ஏ.சி மின்சாரத்தில் எரியும் சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி விளக்குகளில் அதற்கான பாலஸ்ட் இணைக்கப்பட்டிருக்கும்.

இனி மத்திய அரசு மானியம் பெற அங்கீகரிக்கப்பட்டுள்ள சிஸ்டம் மாடல்களை பற்றி பார்க்கலாம்.

1. SLOAR LANTERN

சோலார் பேனல்  -- 10W/12V
பாட்டரி-----------------7 AH/12V
பல்பு ---------------------7 W CFL
பாட்டரி சார்ஜிங் நேரம்------- 4 மணி நேரம்
உபயோகிக்கும் நேரம்---------12 மணி நேரம்.

2. CFL HOME LIGHTING SYSTEM  

 MODEL NO.1 - ONE LIGHT

சோலார் பேனல்---------------- 18W/12V
பாட்டரி-------------------------------- 20AH/12V
பல்பு ------------------------------------ CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.2 - 2 LIGHT

சோலார் பேனல் ---------------  37 W/12V
பாட்டரி ------------------------------ 40AH/12V
பல்பு ------------------------------------ 2 Nos CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்                                                                                                                    

MODEL NO.3 - 2 LIGHT + 1 FAN

சோலார் பேனல் ------------- 2 Nos 37W/12V or 1 No 74W/12V
பாட்டரி ----------------------------75AH/12V
பல்பு ---------------------------------2 Nos CFL 9W/11W
ஃபேன் ------------------------------20W - DC FAN
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.4  - 4 LIGHTS

சோலார் பேனல் ------------- 2 Nos 37W/12V or 1 No 74W/12V
பாட்டரி ----------------------------75AH/12V
பல்பு ---------------------------------4 Nos CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

மேற்கூறிய மாடல்கள் அனைத்தும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சப்ளையர்களிடம் கிடைக்கும். அவர்களிடம் வாங்கினால் அரசு மானியம் கிடைக்கும்







நெல்லை: தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் நிலவி வரும் மின்வெட்டை சமாளிப்பதற்கு முதற்கட்டமாக 20,000 சோலார் மின்விளக்குகள் அமைக்க தமிழக அரசு ரூ.52 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரலாறு காணாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. கிராமப்புறங்களில் 18 மணிநேரமும், நகர்ப் பகுதிகளில் 12 மணிநேரமும் மின் வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமப் புறங்களில் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் இல்லாமல் தெருக்கள் இருள் அடைந்து காணப்படுகின்றன. மக்கள் பகல் பொழுதை எப்படியாவது ஓட்டிவிட்டாலும், இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

தெரு விளக்குகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, மின்சாரத்தை சேமிக்க சோலார் திட்டம் மூலம் தெரு விளக்குகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வருகிறது. அதை கருத்திற்கொண்டு மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் சோலார் மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளில் 18 லட்சத்து 28,461 மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோலார் மின்விளக்குகள்: 2012-13ம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 20,000 மின்விளக்கு அமைக்கப்படுகிறது. மேலும் 500 வாட் திறன் கொண்ட சோலாரை ஒரு இடத்தில் பொருத்தி 10 தெரு விளக்குகள் எரியும் வகையில் அமைக்கப்படுகிறது. இதுபோல் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக ஆயிரம் விளக்குகள் அமைக்கப்படுகிறது.

 2012-2013ல் 20,000 தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்குகளில் வார்டு வாரியாகவும், தெரு வாரியாகவும் டென்ஜெட் கோ மூலம் மாற்றி புதிய 18 ஆயிரம் சோலார் விளக்குகளை அமைக்க 52 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம்- 1125, திருவள்ளுர்- 1160, கடலூர்- 825, விழுப்புரம்- 1090, வேலூர்- 1000, திருவண்ணாமலை- 790, சேலம்- 700, நாமக்கல்- 560, தர்மபுரி- 400, கிருஷ்ணகிரி- 550, ஈரோடு- 550, திருப்பூர்- 635, கோயம்புத்தூர்- 420, நீலகிரி- 120, தஞ்சாவூர்- 1290, நாகப்பட்டினம்- 830, திருவாரூர்- 730, திருச்சி- 865, கரூர் - 380, பெரம்பலூர்- 190, அரியலூர்- 320, புதுக்கோட்டை- 620, மதுரை- 840, தேனி- 200, திண்டுக்கல்- 475, ராமநாதபுரம்- 495, விருதுநகர்- 540, சிவகாசி- 535, திருநெல்வேலி- 795, தூத்துக்குடி- 750, கன்னியாகுமரி- 420.


கிராமங்களில் ஒளி வீசும்... அரசின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, இட்டேரி கிராமங்களிலும், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்களிலும் சோலார் மின்னொளி திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இனி கிராமங்களில் அனைத்து தெருவிளக்குகளும் ஒளிவீசும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment